IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அன்று அமித்ஷா, இன்று சிதம்பரம் – 9 ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புவதாக விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் உள்துறை மந்திரியாக பதவி வகிக்கும் போது அமித் ஷா கைதானது வரலாறு திரும்புவதாக அரசியல் வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.


9 வருடங்களுக்கு முன் இந்திய நாட்டின் முன்னாள் உள்துறை மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது சிபிஐயை தன் கண் அசைவில் வைத்திருந்தவர், இன்று தன்னை கைது செய்ய டெல்லி ஜோர்பாக் இல்லத்துக்கே சிபிஐ அதிகாரிகள் படையெடுத்து வந்து கைது செய்வார்கள் என கனவில் கூட சிதம்பரம் நினைத்திருக்க மாட்டார்.


2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, குஜராத்தில் செராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது உள்துறை மந்திரியாக இருந்த அமித்ஷா வழக்கில் சிக்கினார். 2010-ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி அமித்ஷா கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் கழித்து தான் குஜராத் கோர்ட் 2010 அக்டோபர் 29ம் தேதி தான் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் குஜராத்தில் இருக்க தடை விதிக்கப்பட்டது.


இதனால் அமித்ஷா 2 ஆண்டுகள் குஜராத்தில் இருக்க தடை விதிக்கப்பட்டதால் டெல்லிக்கு இடம்பெயர்ந்து குஜராத் பவனில் இருக்கும் படியாக அமைந்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு குஜராத்திற்கு திரும்ப அனுமதி அளித்தபின்பு தான் அமித்ஷா குஜராத் திரும்ப முடிந்தது.


ஆனால் 2019 இன்று 9 ஆண்டுகள் கழித்து மத்திய உள்துறை மந்திரியாக அலங்கரிப்பவர் அமித் ஷா . அவர் கட்டுப்பாட்டில் சிபிஐ உள்ளது. தற்போது நிதிமந்திரியாக நிர்மலா சீத்தாராமன் இருக்கிறார். அவருடைய நிர்வாக கட்டுப்பாட்டிற்கு கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வருகிறது.


ப.சிதம்பரமோ ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கித் தவிக்கிறார். கடந்த ஓராண்டு காலமாக கைது செய்வதில் இருந்து தப்பிவந்த சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நேற்று (புதன் கிழமை) டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது தான் இந்த வழக்கின் இறுதிகட்டம். இதை சற்றும் எதிர்பார்க்காத ப.சிதம்பரம் தனது வக்கீல்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஏறி நிவாரணம் கிடைக்க அலைந்தார். ஆனால் நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை.


இதற்கிடையே தான் டெல்லியிலுள்ள ப.சிதம்பரத்தின் வீட்டை சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகளும் படையெடுத்தனர். சுவர் ஏறி சிதம்பரத்தின் வீட்டிற்குள் குதித்து இரவோடு இரவாக சிதம்பரத்தை கைது செய்தனர்.


ஆக 9 ஆண்டுகளுக்கு முன் அமித் ஷா கைது செய்யப்பட்டதையும், இப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதையும் முடிச்சு போடும் அரசியல் வல்லுநர்கள் வரலாறு திரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader