IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி சாதனை

259


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 9வயது சிறுவன் உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் மலை ஏறி சாதனை படைத்துள்ளான்.


ஆப்பிரிக்க நாடுகளில் மிக உயர்ந்த மலைச்சிகரம் கிளிமாஞ்சாரோ. இவை கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 344 அடி உயரத்தில் உள்ள இந்த மலைச் சிகரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அத்வைத் பார்தியா என்ற 9வயது சிறுவன் ஏறி சாதனை படைத்துள்ளான்.


பயிற்சியாளர் சமீர் பதாம் என்பவரின் கண்காணிப்புடன் இந்த மலையில் ஏறியுள்ளான். இந்த சிறுவன் ஏற்கனவே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து சாதனை படைத்த அத்வைத் கூறும் போது, கிளிமாஞ்சாரோவில் ஏறியது புதுவிதமான அனுபவத்தை தந்தது. மலையில் ஏறும் போது தங்குவதற்கு ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் உதவியாக இருந்தது.


மலை ஏற ஏற உடலை நடுங்கும் அளவிற்கு கடுமையான குளிர் வாட்டியது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் மிகவேகமாக, மலையில் ஏறி சாதனை படைத்துள்ளேன் என்றான்.