IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா

Get real time updates directly on you device, subscribe now.


நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பியது. அதில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணி செப்டம்பர் 7ம் தேதி நடந்தது.

சரியான பாதையில் சென்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில் பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் விக்ரம் லேண்டர் எங்கு சென்றது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறக்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது பின்னர் சுற்றி வரும் ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது.

இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டுபிடிப்பதில் வெற்றி பெறவில்லை. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவிற்கு உதவியாக விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டது.

இந்த நிலையில் விக்ரம்-2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
#VikramLander #Chandrayaan2 #NASA #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader