IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா..? கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு உணவுப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி கடுமையான உயிர் பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை கொரோனா வைரஸினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது.

ஊரடங்கின் போது கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்த பாடில்லை. இந் நிலையில், அத்யாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களான உணவு பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, போக்குவரத்துக்கு தடையில்லாமல் இருக்க வேண்டும்.

அத்யாவசிய பொருட்கள் சட்டம் 1955ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் பதுக்கல், கறுப்பு சந்தைப்படுத்துதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அத்யாவசிய பொருட்கள் நியாயமான விலையில் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

144 தடை உத்தரவை பயன்படுத்தி சிலர் பொருட்களை பதுக்குவதாக வந்த தகவலை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More