IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு

167


பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டியுள்ளார்.


பிரேசிலில் சா பாலோ மாகணம் இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்ட்டின். இவர் ஒரு விவசாயி. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இவோன் கணவரிடம் இருந்து பிரிந்து கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் அவரது குழந்தை உடல் நல குறைவால் இறந்தது. இதனால் இவான் கடும் மன உளைச்சலிக்கும், விரக்திக்கும் உள்ளானார்.


இதில் இருந்து விடுப்பட அவர் வழியை தேடினார். அப்போது தான் சுற்றுப்புறத்தில் ஏரலமான கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடப்பதை பார்தார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார். அதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீட்டர் உயரம் 9 மீட்டர் அகலம் மற்றும் 8 மீட்டர் நீளம் கொண்ட அழகான வீட்டை கட்டி முடித்தார்.


வீட்டினுள் உள்ள படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி பாட்டில்களால் கட்டப்பட்டு உள்ளன. இந்த பாட்டில் வீடு கட்டுமனா செலவுகளை குரைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவு என இவான் மார்ட்டின் கூறினார்.


#60,000glass #bottles #Beautiful #house