IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பத்திரிகை தகவல் மையம், ஐஆர்சிடிசி உள்ளிட்ட துறைகளின் சீன செயலிகளின் கணக்குகள் நீக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் சீன தொடந்த தாக்குதலை அடுத்து சீன அரசுகளின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பல அரசுத் துறைகள் தங்களது டிக் டாக் கணக்குகளை நீக்கியுள்ளன.

இந்திய அரசு நேற்று டிக்டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது. இந்த தடை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப தகவல் அமைச்சகம் இந்த செயலிகள் நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது எனவும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அபாயமானது எனவும் தெரிவித்திருந்தது.

இந்த செயலிகளில் டிக்டாக் செயலி பல்வேறு இந்திய அரசியல் துறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தியப் பத்திரிகை தகவல் மையம் பிரதமர் நாட்டுக்கு அளிக்கும் செய்திகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தகவல்களை தனது டிக்டாக் பக்கம் மூலம் பகிர்ந்து வந்தது. அந்த கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மைகவர்ன்மெண்ட், ஐஆர்சிடிசி உள்ளிட்ட துறைகளின் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன, இதனால் இந்த துறைகளின் தகவல் பரிமாற்றத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதைப்போல் கொரோனா குறித்த தகவல்களைப் பகிர்ந்து வந்த கர்நாடக அரசு, மும்பை மாநகராட்சி, மகாராஷ்டிரா சுகாதாரத் துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளும் தங்கள் கணக்குகளை நீக்கி உள்ளன.

இந்திய அரசின் சீன செயலிகளின் தடையை தொடர்ந்து மதுரையில் செயல்பட்டு வரும் கமலம் குழும மீடியாக்களான IN4NET & FLIXWOOD சேனல்கள் அதிரடியாக தனது HELO ஆப் பயன்பாட்டை நிறுத்தியது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader