IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அமேசான் புல்பில்மெண்ட் சென்டர் மற்றும் டெலிவரி நெட்வொர்க்கில் 50,000 சீசனல் வாய்ப்புகள்

Get real time updates directly on you device, subscribe now.

தற்போது நடைபெற்று வரும் கோவிட்-19 ( COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்துவருவதால் சமூகத்திற்கு ஒரு முக்கியமான சேவையை வழங்குவதில் தனித்துவமான பங்கைக் கொண்டிருப்பதாக அமேசான் இந்தியா உறுதியாக நம்புகிறது;

அமேசான் சேவையை நம்பியுள்ள மக்களிடமிருந்து, குறிப்பாக பொதுவில் வெளியே வருவதற்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களிடமிருந்து தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்வதற்காக 50,000 சீசனல் ரோல்களை திறந்து வைத்திருப்பதாக அமேசான் இந்தியா இன்று அறிவித்துள்ளது.

அமேசான் ஃப்ளெக்ஸுடன் சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக பகுதிநேர நெகிழ்வான வேலை வாய்ப்புகள் உட்பட அவற்றின் புல்பில்மெண்ட் சென்டர் மற்றும் டெலிவரி நெட்வொர்க்கில் இது பல்வேறு ரோல்களாக இருக்கும்.

“இந்த பொறுப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மற்றும் இந்த கடினமான நேரத்தில் சிறு மற்றும் பிற வணிகங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய உதவுவதில் எங்கள் அணிகள் செய்து வரும் பணிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதை செயல் படுத்த அமேசான் புல்பில்மெண்ட் மற்றும் டெலிவரி நெட்வொர்க்கில் 50,000 க்கும் மேற்பட்ட சீசனல் அசோசியேட்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறோம் ” என அபாக் (APAC), (மெனா)MENA மற்றும் (லட்டம்) LATAM, வாடிக்கையாளர் புல்பில்மெண்ட் ஆபரேஷன் வி‌பி அகில் சக்சேனா, கூறினார்.

இந்த வாய்ப்புகளை உருவாக்கும் போது, அமேசான் அதன் அசோசியேட்கள்,பார்ட்னர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் உறுதியாக உள்ளது, மேலும் அவர்களின் நல்வாழ்வை நோக்கி பல நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

கட்டாய முகம் மறைத்தல், கட்டிடங்களில் தினசரி வெப்பநிலை சோதனைகள், அடிக்கடி தொடும் பகுதிகளை கூடுதல் கால இடைவெளியில் சுத்தம் செய்தல் மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் சுத்தம் செய்வதற்கான தீவிரம் மற்றும் கை கழுவுதல் மற்றும் கை சானிடைசேஷன் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பாதுகாப்புத் தேவைகள் குறித்து அசோசியேட்கள் இடையே விழிப்புணர்வு உள்ளிட்ட அதன் மக்களின் பாதுகாப்பிற்காக நிறுவனம் 100 குறிப்பிடத்தக்க செயல்முறை மாற்றங்களை செய்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader