IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆழ்துளைக் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்

Get real time updates directly on you device, subscribe now.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் பெறுவதற்கு விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

50 சதவீத மானியம்

அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன், அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா, அடங்கல் நகல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

தகுதியுள்ள விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader