நிலவில் 4ஜி நெட்வொர்க் அமைக்க திட்டம்! நோக்கியாவுடன் கைகோர்க்கும் நாசா

Get real time updates directly on you device, subscribe now.

பரந்த உலகில் செல்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்பதைப் போல ஸ்மார்ட் போனின் பயன்பாடு அந்தளவிற்கு மனிதன் பயன்பாட்டில் இன்றியமைதா ஒன்றாகி விட்டது. அந்த செல்போன் பயன்பாட்டை பூமியை அடுத்து நிலவிலும் பயன்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் தலைசிறந்த செல்போன் நிறுவனமான நோக்கியா கைகோர்க்க உள்ளது. இந்த திட்டத்தில் களமிறங்கிய நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு ரூ.103 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

அறிவியல் வளர்ச்சி காணும் முன்பு யாரும் நிலவை எட்டி பார்க்க கூட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது நிலவை எட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளோம். அந்த வகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சந்திரனில் உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்கு உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களை நாசா அணுக உள்ளது.

2028 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி, ஆய்வு செய்வதற்காகவும், அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க பல நிறுவனங்களுடன் 2,714 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் தொடர்புகொள்ளவும், HD தரத்தில் வேகமாக படங்களை அனுப்பவும் நிலவின் மேற்பரப்பில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்க பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது.

#4G NETWORK #4g moon #nokia #in4net

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், இந்த 4ஜி அமைப்பு நிலவின் மேற்பரப்பில் நீண்ட தூரத்தில் உள்ளீட்டவற்றை தொடர்பு கொள்ள உதவும் என்று கூறியுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More