IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ! கடத்தல் முயற்சி முறியடிப்பு

164

ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 400 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம், மாந்தோப்பு கடற்கரையிலிருந்து 1 கி.மீ பீடி இலைகள் கரை ஒதுங்கின.

தகவலறிந்த மண்டபம் கடலோர காவல் குழும போலிஸ் எஸ்.ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார் பீடி இலைகளை சேகரித்தனர். இதில் 15 மூடையில் 400 கிலோ பீடி இலைகள் இருந்தன.

மீன்பிடிக்க தடை விதித்ததால் இலங்கைக்கு படகில் கடந்த முடியாமல் வீட்டிலும் பதுக்கி வைக்க முடியாமல் கடற்கரையில் வீசியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் கடத்தல் காரர்கள் குறித்த விசாரணையும் நடைபெறுகிறது.