IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மத்திய அரசின் மகத்தான் திட்டம் – வேலைவாய்ப்பை அதிகரிக்க 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Get real time updates directly on you device, subscribe now.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும் என்றார். ஊரக, நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும். மேலும் சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும்.

மக்கள் சுகாதார பரிசோதனை மையங்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படும். ஐ.சி.எம்.ஆர் மூலம் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். சுகாதார திட்டங்களுக்கான செலவினங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இ-வித்யா திட்டத்தை தொடங்கியுள்ளார். டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கல்வி கற்பித்தல் உடனடியாக செயல்படுத்தப்படும்.

திக்‌ஷா என்ற பெயரில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும். 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி மே மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்படும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணையவழி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும்.

மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும். தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழில் செய்வதை எளிமையாக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது. நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader