IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனா. அங்கு படிப்படியாக கொரோனாவின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பள்ளிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்தும் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், தெற்கு சீனாவில் குவாங்சிஜூவங் என்ற பகுதியில் வாங்கு என்ற இடத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி தொடங்கியதும் பள்ளி சிறுவர்கள் அனைவரும் வகுப்பில் உட்காருவதற்காகச் சென்றனர். அப்போது, கத்தியுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்த நபர், சற்றும் எதிர்பாராத நேரத்தில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் 39 குழந்தைகளுக்கு கத்திகுத்தி காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மருத்துவ குழுவினர் குழந்தைகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் லி சுயாமின் என்றும் அவர் ஒரு மனநல நோயாளி என்பதும் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்படுகிறது. மேலும் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader