IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

பொதுமக்களின் வசதிக்கேற்ப வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

இதன்காரணமாக நாட்டில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. மேலும், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.

அந்தவகையில், கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டு கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

வீட்டுக்கடன் வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. வட்டி குறைப்பு காரணாக மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும்.

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் 3 மாதத்திற்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை. எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும்.

கொரனோ வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில், 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளில் ரிசர்வ் வங்கி தரப்பில் பல ஆச்சரியமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என்றார்.

இந்திய வங்கி முறை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் உள்ளது. சவாலான சூழலில் உள்ள போதிலும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More