IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

20 வருடங்கள் கெடாமல் இருக்கும் மெக்டொனால்டு பர்கர்

150

 

வருடங்கள் ஆனாலும் ஊறுகாய் கெடாமல் இருக்கும் என்பது தெரியும். ஆனால் அமெரிக்காவில் மெக்டொனால்டு (McDonald’s) கடையில் வாங்கப்பட்ட பர்கர் ஒன்று, 20 வருடங்கள் ஆகியும் இன்று வாங்கியது போல புதிதாக காட்சியளிப்பது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டேவிட் விப்பிள் என்பவர் கடந்த 1999-ம் ஆண்டு McDonald’s கடையில் இருந்து பர்கர் ஒன்றை வாங்கியுள்ளார். நொதிகள் பற்றிய பரிசோதனைக்கு பயன்படுத்த வாங்கிய பர்கரை அவர் தனது கோட்டில் மறந்து வைத்து விட்டார்.

பின்னர் அந்த கோட்டை வேனின் பின்புறம் வைத்து விட்டு மறந்து விட்டார். 2 வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. அதைத் தொடர்ந்து டேவிட் விப்பிள் குடும்பம் லோகனில் உட்டாவின் செயின்ட் ஜார்ஜ் நகருக்குச் சென்றது. அங்கு சென்ற பின்னர் டேவிட்டின் மனைவி அந்த கோட்டை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த கோட்டில் வைத்திருந்த பர்கரை எடுத்து பார்த்த போது அது கெடாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பர்கர் ஒரு தகர டின்னில் வைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு முதல் இந்த பர்கர் பற்றி வெளியுலகிற்கு தெரிந்து வைரலாகி உள்ளது.

இந்நிலையில் தகர டின்னில் மூடி வைக்கப்பட்ட பர்கரை சமீபத்தில் டேவிட் திறந்து பார்த்தார். அப்போதும் புதிதாக வாங்கப்பட்ட பர்கரை போலவே காட்சி அளித்துள்ளது. ஆனால் பர்கரின் வாசனை மட்டும் மாறியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட பர்கரிலிருந்து தற்போது தான் ஒரு கெட்ட வாசனை வருவதாக டேவிட் கூறியுள்ளார்.

 

#20years #Cleared #McDonald’s #Burger