ஐபிஎல் போட்டி குறித்த முக்கிய அறிவிப்பு! உற்சாகத்துடன் பிசிசிஐ தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கால்பந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் என அனைத்து விதமான போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல் போட்டிகள் என அனைத்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 2020 ஐ.பி.எல் போட்டியானது கால வரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிட்டப்படி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஜுன் 10 ஐசிசி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருக்கிறது. எனவே இறுதி முடிவை சற்று தாமதமாக எடுக்க திட்டமிடப்பட்டது.

அந்த தொடரானது ஒத்தி வைக்கப்பட்டால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கின்றது. இதுகுறித்து, பிசிசிஐ தரப்பு, “ஐபிஎல் போட்டியை எங்கு நடத்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. அதிகபட்சமாக வெளிநாட்டில் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்த சாதகமான சூழல் அமையவில்லை. இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ போட்டியை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.” என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது கட்டாயம் நடத்தப்படும் என்று பிசிசிஐ மறைமுகமாக உணர்த்தியுள்ளதால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More