IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

2000 ரூபாய் நோட்டு டிசைனில் புது வித அழைப்பிதழ்… கர்நாடக பாஜக எம்.எல்.ஏ வின் அன்பு பற்று !!

25

பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முகநூல், டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க புகழ் பரப்பும் வேலைகளை அவர்கள் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டி தன்னுடைய பொம்மனஹள்ளி தொகுதிக்கான 175வது வார்டில் பேட்மிட்டண் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஓபன் ஹால் திறப்பு விழாவிற்கு  2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழில் அச்சடித்து தன்னுடைய அன்பை  வெளிக்காட்டியுள்ளார்.

2000 ரூபாய் தாள் போலவே லேஅவுட் கொடுக்கப்பட்டு அதில் காந்தி படத்திற்கு பதிலாக மோடியின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி, இடம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் விவரமும் முன் பக்கத் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழின் பின் பக்கத்தில் 175வது வார்டில் செய்யப்பட்டுள்ள வசதிகள் எண் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரதமர் மோடியின் சாதனைகளான மேக் இன் இந்தியா, ஜன் தன் திட்டம், ஸ்வச் பாரத், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை பட்டியலிட்டுள்ளார்.

மேலும் இதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்றும், தொடர்புக்கான எண்ணும் அதில் இடம்பெற்றுள்ளது. அச்சு அசல் 2000 ரூபாய் நோட்டு போலவே இருக்கும் இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.