IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

159 மணி நேரம் தொடர்ந்து பணி புரிந்ததால் ஜப்பான் பெண் மரணம் !!

11

ஜப்பான் நாட்டில் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் ஓவர்டைமாக தொடர்ந்து 159 மணி நேரம் வேலை பார்த்ததால்   திடீரென மரணம் அடைந்தார்.

Related Posts
1 of 21

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 31 வயது பெண் மிவா சடோ. இவர் ஒரு நாள் கூட விடுமுறையே எடுக்காமல் கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக இருந்தார். மேலும் ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்கும் மிவா சடோ சமீபத்தில் ஓவர் டைம் வேலை பார்ப்பதாக கூறி தொடர்ந்து 159 மணி நேரம் பணிபுரிந்தார்.

இந்நிலையில்  பணியில் இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த மிவா சடோ, மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மரணம் அடைந்தார். ஏற்கனவே இவருக்கு இதயநோய் பாதிப்பு வேற உள்ளது. மேலும்  ஒவர்டைம் பார்த்ததால் மரணம் அடைந்துவிட்டதாகவும் இதுகுறித்து ஜப்பான் தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.