144 தடை உத்தரவை மீறினால் என்ன தண்டனை? – மாவட்ட நீதிபதி விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் (அரசின் பொது ஊரடங்கு உத்தரவை மீறுதல்) கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பிரிவு 269-ன் (உயிர்க்கொல்லி நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக நடந்து கொள்ளுதல்) கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

பிரிவு 270-ன் (உயிர்கொல்லி நோயை பரப்பும் வகையில் அலட்சியமாக நடந்து கொள்ளுதல்) கீழ் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பிரிவு 271-ன் (தனிமைப்படுத்துதல் உத்தரவை தெரிந்தே மீறுதல்) கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் (ஊரடங்கு உத்தரவை மீறுதல்) கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 134-ன் கீழ் (ஊரடங்கு உத்தரவை மீறுதல்) கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பிரிவு 135-ன் (அரசு சுகாதாரத்துறை மற்றும் இதர அரசுத்துறை அதிகாரிகளை ஆய்வு மற்றும் விசாரணை செய்ய விடாமல் தடுத்தல்) கீழ் 1 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader