IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா சுவடே இல்லாத 11 நாடுகள்! ஆச்சரியத்தில் உலக மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலக அளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டியுள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 12 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 11 நாடுகளில் கொரோனா பாதிப்பின் சுவடே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, துர்க்மெனிஸ்தான், சாலமோன் தீவுகள், வானுவட்டு, கிரிபட்டி, மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி நாடுகள், நௌரு, நியுவே, பலாவு, சமோவா, டோங்கா ஆகிய நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

வடகொரியா, துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகள், கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தின. பயணங்களை ரத்து செய்தன. அதனால் அங்கு நோய் கண்டறியப்பட வில்லை. அதே போல இவற்றில் சில நாடுகள் தீவுகள் என்பதால் அங்கும் கொரோனாவால் நுழைய முடியவில்லை. ஆகவே கொரோனா பரவலுக்கு முதற்காரணம் அலட்சியம் தான் என்பது இதன்மூலம் தெரிகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader