IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைனில் பாடத்தை தவறவிட்ட 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

Get real time updates directly on you device, subscribe now.

டிவி பழுதானதால் ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் கேரள அரசு ஆன்லைனின் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

மாணவர்கள் வீடுகளில் இருந்தே குறிப்பிட்ட்ட தொலைக்காட்சி சேனல் மூலமாகவும், இணையத்திலும் வகுப்புகளை கவனிக்க பிரத்யேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலப்புரத்தில் உள்ள வலஞ்சேரியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவர் வீட்டில் இருந்த டிவி பழுதாகி விட்டதால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் போயுள்ளது.

வகுப்பை ஆன்லைனில் பார்க்கலாம் என்றாலும் அவர் வீட்டில் உள்ள ஒரு தொலைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி உடலில் தீயிட்டுள்ளார்.

இதனை கண்ட மாணவியின் தாயார் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளியான மாணவியின் தந்தைக்கு தற்போது வேலை இல்லை என்பதால், வீட்டில் பழுதான டிவியை சரி செய்ய முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader