IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

10வயது சிறுமியை நாசம் செய்த காமூகனை காட்டிக் கொடுத்த “ஒத்த செருப்பு”

Get real time updates directly on you device, subscribe now.


முன்விரோதம் காரணமாக 10 வயது சிறுமியை கற்பழித்து கல்குவாரியில் கொலை செய்து தண்ணீரில் வீசியுள்ளார். இந்த வழக்கிற்கு முக்கிய தடயமாக குற்றவாளியின் ஒத்த செருப்பு மூலம் போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.


திண்டிவனம் அருகே நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கவிதா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். போன மாதம் செப்டம்பர் 3 -ந்தேதி மளிகை கடைக்கு போன கவிதா வீடு திரும்பவில்லை. அதனால் பதறிப் போன அவளது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசாரும் விசாரணையை துவங்கினர். மேலும் கவிதா வீட்டில் அருகியிலிருந்த சிசிடிவி காமிராவையும் ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் குழந்தையை யாராவது கடத்தி இருக்கலாமோ என்று போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் மறுநாளே, கவிதாவின் வீட்டு பின்புறம் உள்ள கல்குவாரி தண்ணீரில் கவிதா சடலமாக மிதந்து கிடந்தாள். உடனே கவிதாவின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தையை யாரோ கற்பழித்து கொலை செய்தது உறுதியானது.


இதையடுத்து விசாரணை மேலும் தீவிரமானது. கொலைக்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த கல்குவாரி அருகே ஒத்த செருப்பு கிடந்துள்ளது. அந்த ஒத்த செருப்பை, குழந்தையின் அம்மாவிடம் காட்டி, இது யாருடையது தெரியுமா என கேட்டனர். அதற்கு அவர், பக்கத்து வீட்டுக்காரர் மகேந்திரனுடையது என்றனர். மகேந்திரன் ஒரு கூலி தொழிலாளி. 42 வயதாகிறது.


கொலை குறித்து மகேந்திரனிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகுதான் குழந்தையை நாசம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கெண்டார். இது சம்பந்தமான அவர் அளித்த வாக்கு மூலத்தில் “எனக்கும், குழந்தையின் அப்பாவுக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அதனால அவரை பழிவாங்கியதாக இருக்கட்டும் என்று தான் குழந்தையை கடத்தி கற்பழித்து கொலை செய்தேன் என்றார்.


மகேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். அதில், சம்பவத்தன்று கவிதா, மளிகை கடைக்கு வரவும், நைசா பேசி அப்படியே கூட்டிட்டு போய் கல் குவாரியில் வைத்து பலாத்காரம் செய்தேன். அப்படியே விட்டுவிட்டால் என்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என்று எண்ணி அங்கேயே அவளை கொன்று, கல்குவாரி தண்ணியில் வீசிவிட்டேன். அங்கே என் செருப்பை விட்டுட்டு வந்தேன். அதுதான் என்னை காட்டி கொடுத்து விட்டது” என்றார். இதையடுத்து, மகேந்திரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader