IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ராட்சச கிரேன் கவிழ்ந்து கோர விபத்து – 10 பேர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

ஆந்திராவில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிரமாண்ட கிரேன் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சச கிரேன் மூலம் கண்டெய்னர் ஏற்றி வைக்கும் பணி நடைபெற்றது. கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்காக ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடிரென கிரேன் அறுந்து தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தது.

இதில் கிரேனுக்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது ? என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader