IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

10 வயதில் ஜவுளி வியாபாரம் இன்று பல 100 நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்!

Get real time updates directly on you device, subscribe now.

வாழ்க்கை அர்த்தமுள்ளதும் அல்ல, அர்த்தமற்றதும் அல்ல. அது ஒரு வாய்ப்பு. தெரிந்தோ, தெரியாமலோ அந்தத் தத்துவார்த்த வரிகளைப் பின்பற்றியவர்கள் தாத்பர்யங்களைப் பெற்று விடுகின்றனர்.

பல வர்த்தக முதலாளிகளின் வாழ்க்கையைப் புரட்டும்போது இது நிதர்சனமாகியிருக்கிறது. கடல் கடந்து சென்ற வாஸ்வானி குடும்பத்தின் வளர்ச்சி அளப்பரியது. இந்தோனேசியாவுக்கு ஓடிய அந்தக் குடும்பம், கப்பலின் சரக்குப் பெட்டகத்தில் ஜவுளி விற்பனையைத் தொடங்கியது. 10 வயதில் அப்பாவின் தொழிலுக்கு வந்தார் வாஸ்வானி. ஒருநாள் உலகளாவிய நிறுவனமாக இது ஒரு நாள் வளரப்போகிறது என்று சொன்ன வார்த்தை பலித்துப்போனது.

வாஸ்வானிக்கு இப்போது 80 வயது ஆகிறது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு விரிந்து நிற்கும் டோலாராம் குழுமத்தின் இன்றைய சொத்து மதிப்பு 1 புள்ளி 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். நைஜீரியாவில் துறைமுகத்தைக் கட்டமைக்கிறார். எஸ்டோனியாவில் காகிதம் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் வங்கி, இந்தியாவில் மின் விநியோகம் என வர்த்தகம் கிளை பரப்புகிறது. ஆப்பிரிக்கா உள்பட 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் உச்சத்துக்குப் போய் விட்டது டோலாராம். இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காலடி வைத்துள்ள வாஸ்வானி, சொத்து மேலாண்மை வர்த்தகத்தில் இறங்க உத்தேசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடங்காத வர்த்தகப் பசி

70 ஆண்டுப் பாரம்பரியமிக்க டோலாராம் குழுமம், ஒருபுறம் பன்னாட்டு வர்த்தகத்திலும் மற்றொரு புறம் புதிய நிறுவனங்களையும் தொடங்குகிறது. வகை வகையான வர்த்தகத்தை வளர்த்தெடுப்பதில் உத்வேகம் செலுத்துகிறது. அண்மையில் ஆன்லைன் கடன் வணிகத்தை வெற்றிகரமாகத் துவக்கி இந்தோனேசியாவில் மாவட்டம்தோறும் கடன் வழங்கிக்கொண்டிருக்கிறது.

புதிது புதிதாக வணிக உத்திகளைத் தருவித்துக் கொள்ள வர்த்தக உபாயத்தைக் கையாளுகிறது. குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 18 நிறுவனங்களைத் தொழில்முறை மேலாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.

கடந்த 7 தசாப்தங்களாக டோலாராம் நிறுவனம் நூறு வகையான வணிக நிறுவனங்களைத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தலைமை செயல் அதிகாரி சஜன் வஸ்வானி, 70 விழுக்காடு தோல்வியில் முடிந்ததாகக் கூறுகிறார். அதேநேரம் நான்கில் ஒருபங்கு வெற்றி பெற்றுள்ளதை பெருமையாகச் சொல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் வருவாய்களை அள்ளியதாகத் தெரிவிக்கும் வர்த்தக வல்லுநர் லிஸ்ஸா, பல நாடுகளில் வணிக நிறுவனத்தைத் தொடங்கும்போது நெருக்கடியைச் சந்தித்தாகக் கூறுகிறார்.

பெருமிதம்

டோலாராம் குழுமம் சிந்தி மாகாண வணிகக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக வஸ்வானி பெருமிதம் கொள்கிறார். ஏனென்றால் சிறிய தொகையாக இருப்பினும் தொழில்முனைவோராக உருவாகவே சிந்திகள் விரும்புவார்களாம். அவர்களை உழைப்பை வேறொரு நபரிடம் செலுத்த தயங்குவார்கள் என்கிறார் வஸ்வானி.

இந்தோனேசியாவுக்கு ஓட்டம்

18 ஆம் நூற்றாண்டில் வஸ்வானியின் குடும்பம் இந்தோனேசியாவில் குடியேறியது. இந்தோனேசியா சிந்திகளின் புகலிடமாக இருந்தது. 1947 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் வஸ்வானியின் தந்தையும் இந்தோனேசியாவுக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாவா தீவில் உள்ள மலாங்கில் ஒரு சிறிய கடையைத் தொடங்கினார்.

உதயமான ஜவுளி வியாபாரம்

வஸ்வானி தனது 10 வது வயதில் அப்பாவின் ஜவுளி வியாபாரத்தில் நுழைந்தார். அந்த நிறுவனம் கப்பலின் சரக்குப் பெட்டகமாக இருந்தது. 19 வயது பள்ளிப் பருவத்தில் தொழிலை வஸ்வானியிடம் ஒப்படைத்த அவரது தந்தை, ஒருநாள் உன்னால் இந்தத் தொழில் உலகளாவிய அளவில் வளரப்போகிறது என்றார். அதன்படியே விற்பனை மட்டுமே செய்துகொண்டிருந்த தொழில் வெளிநாடுகளில் தயாரிப்பில் கவனம் செலுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனியில் ஆலைகள் உருவானது.

பள்ளிக் கல்வி

பள்ளியில் படிக்க வேண்டிய பருவத்தில் வஸ்வானியின் குடும்பம், தொழிலில் இறக்கி விட்டது. அதனால் படிப்புதான் முக்கியம் என்று கருத வேண்டிய நினைப்பு இல்லாமல் போனது வஸ்வானிக்கு.

கடல் கடந்த வணிகம்

1970 ஆம் ஆண்டுக் கடல் கடந்த வணிகத்தில் காலடி வைக்கிறார் வஸ்வானி. இந்த அனுபவம் வித்தியாசமானது. இந்தோனேசியாவுக்கு அப்பால் தென் ஆப்பிரிக்காவில் தொழிலை விரிவுபடுத்தினால் என்ன என்று கேட்கிறார் வஸ்வானியின் நண்பர். அது பற்றித் தெரியாது என்று கூறுகிறார். ஆகையால் நண்பருடன் நைஜீரியா, கானா மற்றும் ஐவரிகோஸ்டில் இரண்டு வாரம் சுற்றுப்பயணம் செல்கிறார். அடுத்த ஒரு மாதத்தில் நைஜீரியாவில் உள்ள லாகோசில் வர்த்தகத்தைத் தொடங்குகிறார்.

டோலாராம் தலைமை அலுவலகம்

சிங்கப்பூரின் புறநகர்ப்பகுதியில் தலைமை அலுவலகத்தைத் தொடங்கப்படுகிறது. தனது தாத்தா ஷேத் டோலாராம் பெயரில் நிறுவனத்துக்குப் பெயர் சூட்டப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய வர்த்தக மாதிரியை அஸ்வானி பின்பற்றவில்லை. பல குடும்ப நிறுவனங்கள் இரண்டு மற்றும் 3 ஆம் தலைமுறைகளில் தோல்வி அடைந்ததை நினைவுபடுத்துகிறார். ஆதலால் குடும்ப உறுப்பினர்களைப் பங்குதாரர்களாக மட்டும் இருக்க அனுமதித்தார்

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More