IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஸ்மார்ட் போனில் 'மொபைல் கேம்' விளையாடி கண் பார்வையை இழந்த சீன பெண் !!

21

சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது.

கிழக்கு ஆசிய நாடான, சீனாவின், ஷாங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, மொபைல் போன் விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம்.

Related Posts
1 of 22

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவர் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறியுள்ளார். வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது பல மணி நேரம் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். “விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான் காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட தொடங்கிவிடுவேன், அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவேன், மாலை 4 மணி வரையில் கேம்தான் விளையாடுவேன்,” என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவேன் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

சமீபத்தில், ‘ஹானர் ஆப் கிங்ஸ்‘ எனப்படும் விளையாட்டை, தொடர்ந்து, 24 மணி நேரம், அந்த பெண் விளையாடி உள்ளார். அப்போது, அவரது வலது கண்ணில் பார்வை, படிப்படியாக குறைந்து. முற்றிலும், பார்வை பறிபோனதும் தான், விளையாடுவதை நிறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும் காணப்படும் பிரச்சனை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பேசுகையில், தொடர்ச்சியாக இடைவெளியின்றி செல்போனை பார்த்ததால் இந்த பிரச்சனை நேரிட்டு உள்ளது என கூறியுள்ளனர்.