IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஸ்பெயினில் பெண்கள் போராட்டத்தால் 300 ரயில்கள் நிறுத்தம்!

22

ஸ்பெயினின் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் திடீர் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். ஆண்களை விட தங்களுக்கு மிகவும் குறைவாக சம்பளம் தருவதாகக் குற்றம்சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தம் காரணமாக, அங்கு 300 ரயில்கள் ஓடவில்லை.