IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மின்னஞ்சல் நாயகன் சிவா ஐயாதுரை

328

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மின்னஞ்சல் சேவையின் அவசியத்தை யாருக்கும் சொல்லிக்கொடுத்து புரியவைக்க வேண்டியதில்லை.

தற்போதிருக்கும் ஸ்மார்ட் போன் உலகத்திற்கு அடிப்படையே இந்த மின்னஞ்சல் சேவை தான் எனலாம்.

இந்த சேவை கண்டுபிடித்தது நம்மில் ஒருவர் தான், அதாவது தமிழர் சிவா ஐயாதுரை. இன்று டிசம்பர் 2ம் தேதி அவருடைய பிறந்தநாள்.

அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கிறது இந்த கட்டுரை

இளமையும் கல்வியும்

ஐயாதுரை டிசம்பர் 2, 1963 இல் தமிழ்நாட்டில் பிறந்தார். தனக்கு 7 வயது இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்.

பின்னர் திரைப்படங்களுக்கு ANIMATION துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்.

இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றவர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் ( BIOLOGICAL ENGINEERING) துறையில் எம். ஐ. டி யில் இருந்து முனைவர் பட்டமும் வாங்கியிருக்கிறார்.

பணிகளும் நூல்களும்

கடந்த 1996 இல் ஐயாதுரை மில்லேனியம் புரொடக்சன்ஸ் ( MILLENNIUM PRODUCTIONS) என்பதன் தலைவராக இருந்த பொழுது ஆர்ட்ஃசு-ஆன்லைன்.காம் (Arts-Online.com) என்பதையும் ஆர்வர்டு-இசுக்கொயர்.காம் (Harvard-Square.com) என்னும் இரண்டு மின் குழுமங்களை உருவாக்கினார்.

இதன் அடிப்படையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்:

 1. 1996 இல் நியூயார்க்கின் ஆல்வொர்த்து பதிப்பகத்தார் (Allworth Press, New York) வெளியிட்ட “Arts and the Internet”.
 2. 1997 இல் அதே ஆல்வொர்த்து பதிப்பகத்தாரால் “The Internet Publicity Guide” என்னும் தலைப்பிட்ட நூலையும் வெளியிட்டுள்ளார்.

  மின்னஞ்சல் உருவான ஸ்டோரி

  1979 இல் நியூ செர்சியில் உள்ள இலிவிங்கிசிட்டன் உயர்நிலைப்பள்ளியில் (Livingston High School) பயின்று கொண்டிருந்த 14-வயது நிரம்பிய மாணவராகிய ஐயாதுரை தன் மின்னஞ்சல் கண்டுபிடிப்பைத் தொடங்கினார்.

  நியூ செர்சி மருத்துவம், பல்மருத்துவப் பல்கலைக்கழகத்தினருக்காக ( University of Medicine and Dentistry of New Jersey) மின்வழி அஞ்சல் அனுப்ப ஒரு புது முறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் புகழ்பெற்ற வெசிட்டிங்கவுசு அறிவியல் திறனாளர் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டுக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெசிட்டிங்கவுசு அறிவியல் (Westinghouse Science Talent Search award) படிப்புத்தொகை விருதை வென்றார்
  கடந்த 2011 ஆண்டு Time Magazine நவம்பர் இதழில் Techland என்ற பகுதியில் Doug Aamouth நிகழ்த்திய “The Man Who Invented Email” என்னும் நேர்காணலில் எப்படி ஐயாதுரை உருவாக்கிய மென்கலன் இன்று நாம் அறியும் மின்னஞ்சல் என்பதைத் தோற்றுவித்தது என்று கூறினார்.

  அந்த நேர்காணலில், புரூக்கேவன் தேசிய ஆய்வகத்தில் அணுத்துகள் அறிவியலாளராக இருந்த இலசிலி மைக்கேல்சன் (Leslie Michelson) என்பார் மின்னஞ்சல் உருவாக்கும் கருத்தை ஐயாதுரைக்குச் சொல்லி செயல்படுத்தச் சொன்னார் என்றும் விளக்கியுள்ளார்.

  சாதரணமாக தாள்களில் அனுப்பப்பட்ட மெமோ எனப்படும் குறிப்புகளை மின்வழியாக அனுப்பும் முறையை உருவாக்க வேண்டும் என்று பணித்தார்.
  இதனைச் செயல்படுத்த வேண்டியது உன் பொறுப்பு. இதனை இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை (“Your job is to convert that into an electronic format. Nobody’s done that before”) என்றாராம்.

  ஐயாதுரை வழங்கிய ஆவணங்களையும், மூல கணிநிரல்களையும் பிப்ரவரி 2012 இல் சுமித்துசோனியன் அமெரிக்க வரலாற்றுத் தேசியக் கண்காட்சியகம் பெற்றுக்கொண்டது.

  ஐயாத்துரை கண்டுபிடித்த மின்னஞ்சல் சேவை, உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தமிழர்களுக்கு பெருமையே !.