IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் “உழவு நாயகன்” திருவிழா

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் சமீபத்தில் “உழவு நாயகன்” நிகழ்வு திருவிழாவாக நடந்தது. விவசாயிகளுக்கான இந்த பிரம்மாண்ட நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது சத்தியம் குரூப்ஸ் நிறுவனர் திரு செந்தில் அவர்கள். இதில் விவசாயத்தில் புதுமை செய்த, பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இதில் கலை நிகழ்ச்சியாக மேஸ்ட்ரோ இன்னிசைக் குழுவின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.

மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெரும் நடிகர் டெல்லிகணேஷ், நடிகர் பாண்டியராஜன், அசத்தப் போவது யாரு புகழ் மதுரை முத்து, வடிவேல் பாலாஜி, கவிஞர் திரைப் பாடலாசிரியர் சினேகன் மற்றும் பல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை சுவையாகத் தொகுத்து வழங்கியது ரேடியோ சிட்டி ஆர்.ஜே. தினேஷ் பாபு மற்றும் பார்வதி அவர்கள். விருது பெற்ற விவசாயிகளை மற்றும் விவசாய சமூக ஆர்வலர்களை அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் கரகோசம் எழுப்பிப் பாராட்டினர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader