IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பலாலி விமானநிலைய அபிவிருத்திக்கு தடையாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

29


மத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், வடக்கில் எதற்காக மூன்றாவதாக அனைத்துலக விமான நிலையம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, 20 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.


இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.


மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டபோது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள், திடீரென யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்த முனைவது ஏன் என்றும், ரோகித அபே குணவர்த்தன கேள்வியெழுப்பியுள்ளார்.


பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதை தான் எதிர்க்கவில்லை என்று தெரிவித்த ரோகித அபே குணவர்த்தன ஆனால் அனைத்துலக விமான நிலையங்கள் தொடர்பாக, அரசாங்கத்தின் அப்போதைய கொள்கைக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்


மத்தல விமான நிலையத்தைவிட பலாலி மிகவும் சிறந்தது என்றும், முதலீடுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எவ்வாறு வந்துள்ளது என்றும், ரோகித அபே குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.