IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வு முடிவுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

21

வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

Related Posts
1 of 26

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97-வது இடம் வகித்தது. வடகொரியா, வங்காளதேசம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவையும் விட பின் தங்கியுள்ளது. இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), ஈராக் (78), இலங்கை (84), வங்கதேசம் (88), வடகொரியா (93), பாகிஸ்தான் (106), ஆப்கானிஸ்தான் (107) ஆகிய இடங்களில் உள்ளன.