IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நச்சுப் பாம்புகளின் சீண்டல் ; சிறுவர்களிடம் அடி ; உலகம் சுற்றும் டாக்டரின் சுவாரஸ்ய அனுபவம்

295

இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன், தான் கற்ற மருத்துவத்தை உலகம் முழுவதும் மக்களுக்கு சேவையாக கொடுக்க பல்வேறு நாடுகளுக்கு தன் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.

இதுவரை 73 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஸ்டீவன் பெய்ப்ஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தன் பயண அனுபவம் குறித்து ஸ்டீவன் பேசும் போது. தீவிர வறுமை, ஊட்டச்சத்தின்மை, எயிட்ஸ் போன்ற பாதிப்புகளால் சமூக்கத்திலிருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ள மக்கள் என பல தரப்பினரை நேரடியாக சந்திக்க முடிந்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் பல சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். இரவு நேரங்களில் தங்கியிருந்த கூடாரத்தின் வெளியே பல முறை நச்சு பாம்புகள் வந்திருக்கின்றன. சிங்கங்கள் உலாவுவதையும் கண்டேன்.

மலேசியாவில் தங்கியிருந்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். எகிப்தில் தெருவோர சிறுவர்களிடம் அடி வாங்கினேன். இப்படி பல சம்பவங்களுக்கு பிறகும் என் உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.