IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம்.!!

16

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானப்பின்னர், தொழிலாளர்களது வேதனத்துடன் மேலதிகமாக 50 ரூபாவை இணைக்க முடிந்தமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்த 140 ரூபாவை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பிரதிபலனாக 50 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆண்டின் பாதீட்டுடன் ஒருவருடத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், அடுத்தவருடத்துக்கான பாதீட்டில் மீண்டும் இணைக்கப்படும் என்று நம்பலாம் என மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம் 2020ம் ஆண்டில் பெருந்தோட்டத் துறைமயை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


பெருந்தோட்டக் காணிகள் பிரிக்கப்பட்டு அதன் தொழிலாளர்களுக்கே வழங்கப்பட்டு அவர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற விடயத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.


அதன்படி அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அடுத்தவருடம் இந்த வேலைத்திட்டத்தின் உத்தியோபூர்வ பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம் என்று மனோகணேசன் மேலும் தெரவித்துள்ளார்.


இலங்கையின் வரலாற்றை தொல்பொருள் ஆய்வு திணைக்களம் திரிபுபடுத்த முயற்சிக்க கூடாது என்று அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.