IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு

15

தேனீயை கடிக்க வைத்து சிகிச்சை அளிக்கும் முறை, சீனாவில் பிரபலமாக உள்ளது.

சீனாவில் இந்த மருத்துவ சிகிச்சைக்கு தேனீக்கடி தெரபி என்று அழைக்கிறார்கள். அதாவது, இதுகுறித்து சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றும் நிபுணர்கள், எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் உடையவர்களுக்கு தேனீ கொட்டும் சிகிச்சை சிறந்த பலனை தருகிறது.

தேனீ கொட்டுவதன் மூலம் அதன் விஷத்தன்மை ரத்த ஓட்டத்தில் கலந்து அதன் மூலம் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைக்கு இத்தாலி மற்றும் வளைகுடா நாடுகளின் தேனீயை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலப்பின தேனீ பயன்படுத்தப்படுகிறது.

தேனீயின் கொடுக்கில் 0.3 மி.கி விஷத்தன்மை காணப்படுகிறது. தேனீயை பிடித்து அதை நோயாளிகளின் உடலில் பாதிப்புள்ள பகுதிகளில் கடிக்க விட வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட நோய்கள் குணமாகிறது.