IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் உறுதி !!

20

பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் உறுதி செய்துள்ளனர்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளனர். அப்போது அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அதில் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர். மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்பட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் பிரதமர் மோடியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும், நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். பிரதமர் மோடி கூறியபோது, பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூறியபோது, ஆன்லைன் மூலமாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பதை தடுப்பது, ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளனர்.

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமல் படுத்த நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.