IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருமணத்திற்கு பின் பேயாக மாறும் அனுஷ்கா ஷர்மா…

7

விராத் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் புதிய படமானா பரி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்தார்.  அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பில், அவர் நடித்து வெளியாக உள்ள ‘பரி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 18 விநாடிகளே இருக்கும் அந்த டீசரில் அனுஷ்கா ஷர்மா பேய் போன்று காட்டப்பட்டுள்ளார். இந்த டீசருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பளித்து வருகின்றனர்.

ப்ரோசிட் ராய் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி உடனான திருமணத்திற்கு பின், அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.