IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழர்களை கவர வேஸ்டி கட்டினால் மட்டும் போதுமா..? கமல்ஹாசன்

Get real time updates directly on you device, subscribe now.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வருகின்ற நவம்பர் 7ம் தேதி அவரது 65வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக பிரத்யேகமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு, கமல்ஹாசன் பதிலளித்திருப்பதாவது: பிரதமர் நாகலாந்து போகும்போது தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்புவிட்டுவிட்டு அதை தொடவே மாட்டார்கள். இந்த பழக்க வழக்கங்களை எல்லா அரசியல் தலைவர்கள் காலகாலமாக செய்து வருகிறார்கள். இதை கண்டெல்லாம் மக்கள் மயங்கி விட மாட்டார்கள்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வேஸ்டி அணிந்து வருவதை பார்த்த மக்கள், அட இவருக்கு வேஸ்டி கட்ட தெரியுமா ? அப்படி என்கிற ஆச்சரியம் மட்டுமே முதலில் நிற்கும். வேஸ்டி கட்டினால் மட்டுமே தமிழகத்தில் ஓட்டு போட்டுவிடுவார்களா ? அதற்கு அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களை சென்றடையும் செயலாக இருக்க வேண்டும்.

ஹிந்தி மொழி மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை. இதை வட இந்தியர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் மீது நாம் வெறுப்பு கொண்டிருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோஷமாக ‘தேசிய கீதம் பாடுவோமா’ என்றார். அரசியலுக்கு வரவேண்டாம் என நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

அதில் சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர் ஆவார். அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளலாமே தவிர அதன்படி தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த முடிவு கொள்ளை சம்பந்தமானது. தமிழகத்திற்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. எனவே மிக ஜாக்கிரதையாக கூட்டணி அமைக்க வேண்டும். ஆனால் நேர்மைக்கு விரோதமான எவற்றையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader