10.1 C
Munich
Monday, October 3, 2022

டச்சு தேசத்தில் வர்த்தக வாய்ப்புகள்

Must read

நெதர்லாந்தின் அயல்நாட்டு வணிகத்தில் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவுக்குத் தனியிடம் உண்டு. டச்சு வியாபாரிகள் ஜவுளிகள் கொண்டு வந்தார்கள்.

பருத்தி, பட்டு, வாசனைத் திரவியங்கள் வாங்கிக்கொண்டு போனார்கள். அவர்களின் தென்னிந்திய வியாபாரத்துக்குத் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், பழவேற்காடுதான் மையமாக இருந்தது. இங்கே, அவர்களுடைய வெடிமருந்துத் தொழிற்சாலையும் இருந்தது. வியாபாரத்தில் தொடங்கி, நாட்டைப் பிடிப்பது ஒருவித ஐரோப்பிய ராஜதந்திரம்.

பழவேற்காடு, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிறகு, இங்கிலாந்திடம் தோல்வி கண்டு, இந்தப் பகுதிகளை டச்சுக்காரர்கள் பிரிட்டிஷார் வசம் ஒப்படைத்தார்கள்.

தற்போது, நெதர்லாந்துக்கு நம் ஏற்றுமதி 38,645 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை ஆயத்த ஆடைகள், மருந்துகள், கெமிக்கல்கள், இரும்பு உருக்குப் பொருட்கள். நம் இறக்குமதி 14,793 கோடிகள். பெட்ரோலியம், பிளாஸ்டிக்ஸ், கப்பல்கள், படகுகள், அலுமினியம் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 75 சதவீதம். ஐரோப் பிய நாடுகளின் வணிகப் போக்கு வரத்துக்கு மையமாக இருத்தல், நிதிப் பரிவர்த்தனை ஆகியவை சேவைத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள். தொழில் துறையின் பங்கு 22 சதவீதம். பெட்ரோலியம் பதப்படுத் தப்பட்ட உணவுகள், உலோகங்கள், எலெக்ட்ரிக் இயந்திரங்கள், ரசாயனம் ஆகியவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் 3 சத வீதப் பங்கு வகிக்கிறது.

நாணயம்

நெதர்லாந்து ஐரோப்பிய யூனிய னில் அங்கம் வகிக்கிறது. ஆகவே, அவர் களின் பொது நாணயமான யூரோதான் கரன்சி. சுமார் 72 ரூபாய்க்கு சமம்.

விசிட்

நவம்பர், டிசம்பரில் விடுமுறைகள் அதிகம். இந்த மாதங்களைத் தவிருங் கள். மற்ற எல்லா மாதங்களும் போக லாம். பல வண்ண டுலிப் பூக்கள் பூத்துக் குலுங்குவதையும் பிசினஸ் டிரிப்பில் ரசிக்கவேண்டுமா? நீங்கள் போக வேண்டியது ஏப்ரல், மே மாதங்களில்.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். பிசினஸ் மீட்டிங்குகள், பொது நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குப் போகவேண்டும். விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவற்றில் பதவியைக் குறிப்பிடுவது நல்லது. பெரும்பாலான பிசினஸ் மேன்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே, கார்டுகள் ஆங்கிலத்தில் மட்டும் போதும். பேச்சு வார்த்தைகள் நடத்தவும் மொழித்தடைகள் இல்லை. கை குலுக்கல் சாதாரண வரவேற்பு முறை. அப்போது, உங்கள் பெயரை நினைவில் வைத்துக்கொள்வதற்காகப் பலமுறை உச்சரித்துக்கொள்வார்கள். கை குலுக்கும்போது, இடது கையைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது.

நிறுவனங்களில் அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப் பார்கள். இதனால், முடிவுகள் தாமதமாகும். பண்பாடு மிக்கவர்கள். மற்றவர் உணர்வுகளைக் காயப் படுத்தத் தயங்குவார்கள். நாமும் நாசூக் காகப் பேசுவது நல்லது. அடக் கத்தை விரும்புபவர்கள், மதிப்பவர் கள். உங்கள் நிறுவனம், தயாரிப்புப் பொருட்கள் பற்றித் தற்பெருமையோடு பேச வேண்டாம். அதே சமயம், தன் னம்பிக்கை காட்டுங்கள்.

நேர்மையானவர் என்னும் பிம்பத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். நம் மிடமும் இதை எதிர்பார்ப்பார்கள். நேரம் விலை மதிப்பற்றது என்று நம்புபவர்கள். மீட்டிங்குகளில் குச லம் விசாரிக்காமல், நேரடியாக சப் ஜெக்ட்டுக்கு வருவார்கள். கடிதம், ஈ மெயில் ஆகியவற்றுக்குப் பதில் தர 24 மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளாதீர்கள். பதில்களும் தெளி வாக இருக்கவேண்டும். அலுவலகக் கருத்துப் பரிமாற்றங்களில், பெர்சனல் விஷயங்கள் வரவே கூடாது.

நாட்டை நெதர்லாந்து என்றுதான் குறிப்பிடவேண்டும். ஹாலந்து என்று அழைப்பது அவர்கள் விரும்பாத விஷயம். செய்யவே கூடாத ஒன்று மன்னராட்சியை விமர்சிப்பது.

உடைகள்

வங்கிகள், நிதித்துறை ஆகியவற் றில் பணி புரிவோர் சூட் அணிவார்கள். பிறர் பான்ட், சட்டைதான். சந்திக்கும் ஆட்கள், அவர்கள் பணி புரியும் துறை, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் டிரெஸ் அமையட்டும்.

பரிசுகள் தருதல்

பரிசுகள் விலை உயர்ந்தவையாக இருக்கக்கூடாது. அதே சமயம், தரமானவையாக இருக்கவேண்டும். பேனாக்கள், சிறிய எலெக்ட்ரானிக் கரு விகள் தரலாம். வீடுகளுக்கு அழைத் தால், பூங்கொத்துக்கள் வாங்கிக் கொண்டு போவது நல்லது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article