IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : உத்தரப்பிரதேச அரசு காலண்டரில் தாஜ்மஹாலுக்கு இடம் !!

12

உத்தரப் பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹால் இடம் பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் மேலும் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

உ.பி – யில் சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என பாஜக எம்.எல்.ஏ, சங்கீத் சோம் இரு தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளனர். அவரது கருத்து ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, இந்தியர்களின் ரத்தத்தாலும் வியர்வையினாலும் கட்டப்பட்டது தான் தாஜ்மஹால் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்நிலையில், உபி.,மாநில அரசு 2018 ம் வருடத்திற்கான காலண்டரை வெளியிட்டது. அதில், ஜூலை மாத பக்கத்தில் தாஜ்மஹாலும் மற்றும் கோரக்பூர் கோயிலும் இந்தக் காலண்டரில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய பொறுப்பில் இருக்கும் கோரக்பூர் கோயிலும் காலண்டரில் இடம்பிடித்துள்ளது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.