10.1 C
Munich
Monday, October 3, 2022

கூகுள் தொழில்நுட்ப திருவிழாவில் அறிமுகமான புதிய செயலிகள்

Must read

உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது கருவிகள் மற்றும் சேவைகளை மக்களுக்கு அறிமுகம் செய்ய ஐ – ஓ என்கிற திருவிழாவை நடத்துகிறார்கள். அந்தவகையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள், இம்மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தொழில்நுட்ப திருவிழாவை நடத்தி முடித்து அசத்தியிருக்கிறது.

இந்த திருவிழாவில் அறிமுகமான சில செயலிகள்

1. Google Allo

இது வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற குறுந்தகவல் செயலி ஆகும். நமது மொபைல் நம்பரை வைத்து பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்தையும் அல்லோ வழங்குகிறது.

2. Google Duo

இதுவும் குறுந்தகவல் செயலி என்பதுடன் வீடியோ சாட் செய்யும் செயலியாகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் போன்ற செயலியாகும். இது முழுக்க முழுக்க வீடியோ அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இச்செயலியை திறந்தவுடன் உங்களது செல்ஃபீ கேமரா மூலம் உங்களது வீடியோவினை பார்க்க முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் நாக் நாக் எனும் அம்சம், நீங்கள் அழைப்பை மேற்கொள்வருக்கு வீடியோ ப்ரீவியூ ஒன்றை காண்பிக்கின்றது. இச்செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. Google Home

கூகுள் ஹோம் என்றால் சிறிய ரக ஸ்பீக்கர்கள். தினமும் மைக்ரோபோன் மூலம் உரையாடல்களை கேட்கும் இக்கருவி, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் திறன் கொண்டது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் உதவியோடு கேள்விகளை புரிந்து கொள்கின்றது. இத்தோடு வெப்பநிலையை கணக்கிட்டு வீட்டின் விளக்கு நிறங்களை மாற்றும் திறன் கொண்டது.

4. Google Assistant

உரையாடல் செய்யக்கூடிய இந்த ஆப்பினை கூகுள் ஹோம் மற்றும் அல்லோ போன்ற சேவைகளுடன் இணைக்க முடியும். மேலும் இச்செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் பதில்களை கூகுள் படித்து அதற்கேற்ப பதில் அளிக்க உதவுகின்றது.

5.Android N

கூகுள் நிறுவனம் பெயரிடப்படாத கூகுள் என் இயங்குதளத்தின் டெவலப்பர் ப்ரிவியூவினை அறிமுகம் செய்துள்ளது. இதில் க்விக் செட்டிங்ஸ் பட்டன், ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங், புதிய எமோஜி போன்ற அம்சங்களை வழங்கியிருக்கின்றது. இதோடு நோட்டிபிகேஷன்களின் எண்ணிக்கை தீர்மானிக்கும் வசதி, புதிய பிக்சர் இன் பிக்சர் மோடு போன்ற அம்சங்களும் அடங்கும்.

6. Android Wear

இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலும் தாணியங்கி முறையில் செயல்படும் என்றும் இவை ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா இணைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. Android Auto

ஓட்டுனர்களுக்கு அதிக பயன் தரும் வகையில் “ஆண்ட்ராய்டு ஆட்டோ” வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள வேஸ் மற்றும் டிராஃபிக் டிராக்கிங் ஆப் மூலம் ஓட்டுனர்கள் கன நேரத்தில் வாகன நெரிசல் மற்றும் விபத்து குறித்த தகவல்களை பெற முடியும்.

8. Day Dream

புதிய விர்ச்சுவல் ரியால்டி தளமானது “ஆண்ட்ராய்டு என்” மூலம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூகுள் கார்டு போர்டை விட சிறப்பாக இருக்கும் என்றும் இது “ஆண்ட்ராய்டு என்” மென்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக சிறப்பான பயன் தரும். இதன் ஹோம் ஸ்கிரீன் கியர் விர்ச்சுவல் ரியால்டி ஹோம் ஸ்கிரீன் போன்றே காட்சியளிக்கின்றது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளுக்கு விர்ச்சுவல் ரியால்டி வெர்ஷன்களை வழங்கியுள்ளது. இதன் பெரிய கட்டுப்பாடு, இவை பிரத்யேக திரை மற்றும் சென்சார்கள் கொண்ட கருவிகளில் மட்டும் வேலை செய்யும்.

9. Virtual Reality Headset

கூகுள் நிறுவனம் விர்ச்சுவல் ரியால்டி பிரிவில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்தது.

10. Android Instant Apps

ஆண்ட்ராய்டு இன்ஸ்டண்ட் ஆப்ஸ் என்பது கருவியில் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும் லோடு செய்ய வழி செய்யும். மேலும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை மேம்படுத்த 24 மணி நேரம் கூட ஆகாது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article