IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கண்களுக்குள் பச்சை குத்தி கொண்டு ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆன டெல்லி இளைஞர் !!

15

டெல்லியைச் சேர்ந்த கரண் (28) என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

தன்னுடைய பதினாறு வயதில் உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார்.

Related Posts
1 of 20

இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர். மேலும் பச்சைக் குத்துவதோட நிற்காமல் உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய ஹாபி என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், “வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்” என்று கூறும் கரண், கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று கூறுகிறார். மேலும் இந்தியாவிலேயே முதலில் கண்களில் பச்சை குத்திய நபர் இவர்தான் என்கிறார் பெருமையாக.