IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கணவரின் சிகிச்சைக்காக ஆண் குழந்தையை விற்ற மனைவி

18

உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் கணவரின், மருத்துவ சிகிச்சைக்காக தனது 15 நாள் குழந்தையை பெண் ஒருவர் பணத்திற்காக விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷ்ஸ்வரூப் மவுர்யா என்பவர் விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக பணம் தேவைப்பட்டதால், அவரது மனைவி தமக்கு மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.  இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விக்ரம் சிங், ஹர்ஷ்ஸ்வ​ரூப் மவுர்யாவிற்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.  விற்கப்பட்ட ஆண் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.