IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்து கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

54

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்து ரெயிலில் மோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் காவேரி நகரை சேர்ந்தவர் உத்திராபதி. அவரது மனைவி சங்கீதா, மகள் அபிநயஸ்ரீ, மகன் ஆகாஷ். உத்திராபதி மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சனை ஏற்பட்டது. வாழ முடியாத அளவுக்கு கடன் விரட்டி கொண்டு வந்துள்ளது. அதனால்

தற்கொலை முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்பாக சாமி கும்பிட்டு விட்டு சாகலாம் என்று முடிவெடுத்தனர்.கோயில், குளம் சுற்றுலாதலம், என்று எங்கெங்கோ சுற்றிவந்துள்ளனர். கடைசியாக கார்த்திகை தீபம் அன்று திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலுக்கு போனார்கள். அங்கிருந்துதான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்கள்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஏறி, கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கினார்கள். அங்கிருந்து கொடைக்கானலுக்கும் போனார்கள். ஒரு நாள் முழுக்க கொடைக்கானலை சுற்றி பார்த்தனர். பின்னர் சாயங்காலம் திரும்பவும் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்து அங்கு ஒரு ஹோட்டலில் 4 பேரும் வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அதன்பிறகு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சாயங்காலம் 7 மணியில் இருந்து பிளாட்பாரத்திலேயே நின்றிருந்தனர்.

இரவு 11 மணியை தாண்டி கொண்டிருந்தது. அப்போதுதான், மதுரை – திண்டுக்கல் ஸ்பெஷல் ரயில் வந்தது. உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீயின் கையையும் பிடித்து கொண்டு அந்த ரயில் அருகில் வந்ததுமே மொத்தமாக 4 பேரும் ஒரே நேரத்தில் போய் அதற்கு முன்பாக பாய்ந்தும் உடல் பாகங்கள் சிதறி இறந்தனர்.

அந்த வழியாக நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சென்றது. அந்த ரயிலை ஓட்டி வந்த என்ஜின் டிரைவர், 4 பேர் உடல்கள் சிதறி இறந்து கிடப்பதை பார்த்து உடபடியாக கொடைரோடு ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் கொடைரோடு ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுகல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#family #suicide #kodairoad