IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உ.பியில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள கிராமத்தில் கிராமவாசிகள் வெளியேற முடிவு

14

உத்தரப்பிரதேசத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள கிராமத்திலிருந்து, அச்சம் காரணமாக கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.

உன்னாவ் (Unnao) மாவட்டம் பிரேம்கஞ்ச் கிராமத்தில் போலி மருத்துவர் ஒருவர் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியதில், 46 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணமான அந்த போலி மருத்துவர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில், எய்ட்ஸ் கிராமம் என்றே அழைக்கப்படும் பிரேம்கஞ்ச் கிராமத்தில் வசிக்கும், எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத மற்றவர்கள் ஊரிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். பிற ஊர்களில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களை தவிர்ப்பதாகவும், வேறுவழியின்றி சொந்த ஊரை விட்டு காலி செய்ய உள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.