IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உத்தரபிரதேசத்தில் காதலர்களை தாக்கிய இளைஞர்கள் !!

12

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் காதலர்களை இளைஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நெடுஞ்சாலையோரமாக நின்ற காதல் ஜோடி மற்றும் அவர்களின் நண்பர் ஒருவரை, வன்முறை கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது. பொது இடத்தில் அத்துமீறியதாகக் கூறி உருட்டுக் கட்டையால் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தாக்க, மற்றொருவர் வீடியோ பதிவு செய்தார்.

ஆண்களை தாக்குவதை தடுக்க வந்த பெண்ணுக்கும் சரமாரியாக அடி விழுந்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.