IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆசிரியர் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

47
ராமநாதபுரம்,செப்.7- ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோமன் சர்ச் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வங்கிக் கிளை மேலாளர் பிரதீப் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மூலம் சர்ச் வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் மெல்வின் கல்விக்குழும மேலாளர் விமல் பிரதாப் நன்றி கூறினார்.