IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் செய்ய முடியாது- மகிந்த

0 18


கொக்கைன் பயன்படுத்தும் அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


கொக்கைன் பயன்படுத்துகின்றவர்கள், அமைச்சரவையில் இருப்பார்களானால் அவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மகிந்த வலியுறுத்தியுள்ளார்.


அதைவிடுத்து அமைச்சர்கள் அனைவரையும் குற்றஞ்சுமத்த முடியாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,


ஆனால் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களின் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


எனவே அவர்களே அமைச்சரவையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.