IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அச்சுறுத்தும் கடற்கரை

75

இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் தொண்டியிலிருந்து சாயல்குடி வரையிலான தெற்கு பகுதி வரை உள்ள பெரும்பாலான கிராமங்கள் கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ளது.

கிழக்கு பகுதியில் மண்டபம், ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை ஆகிய பகுதிகளில் கடற்கரை இருந்தாலும் தென் பகுதியில்உள்ள வாலிநோக்கத்தில் உள்ள கடற்கரை ஆக்ரோஷ அலைகளை கொண்டது.

இங்குள்ள கரைப்பகுதியில் பாறைகளும் இருப்பதால் அதனை தாண்டி பல மடங்கு ஆழம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். விசயம் தெரியாமல் சென்று இறந்தவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் எந்தவொரு பலகையும் இல்லாதது அங்கு வாழும் மக்களுக்கு
வருத்தமே !

எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.