IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அகில தனஞ்ஜெய பந்து வீசுவதற்கு ஐ.சி.சி அனுமதி!!!

0 11


இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா தனது பந்து வீச்சு முறையை சரி செய்துள்ளமையால் போட்டியில் பந்து வீசுவதற்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின்போது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து அகில தனஞ்ஜெய சர்வதேச போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.


மேலும் தனஞ்ஜெய தனது பந்து வீச்சு முறையை மாற்றி நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.


அதன்படி தனஞ்ஜெய பந்து வீச்சு தொடர்பில், சென்னையில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் அறிக்கை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கொடுக்கப்பட்டது.


இதனை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.