Primary Menu

Top Menu

May 21, 18

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் காலமானார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள், நாவல்கள் மிக பிரபலம்.

மேலும் இவர் சாகித்ய அகாடெமி விருது, கலைமாமணி விருது, இளகிய சிந்தனை விருது என பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும், குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ள இவர் மூச்சு திணறல் காரணமாக நேற்று நள்ளிரவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்களும், வாசகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply