Primary Menu

Top Menu

October 21, 18

வாவ் லட்டுவின் புதிய முயற்சி !

இந்திய லட்டுவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளோம் என்று `வாவ் லட்டு’ ஸ்டார்ட் அப் நிறுவன இயக்குனர் முரளி கூறியுள்ளார்.

சென்னையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.100 கோடி வருமானம் ஈட்ட இலக்கு வைத்துள்ளது.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முரளி சேரட் கூறுகையில், இந்தியா முழுவதும் பொதுமைப்படுத்தும் இனிப்பு வகைகள் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இனிப்பை விரும்புகின்றனர். பிரபலமாக உள்ளது. ஆனால் அனைவரும் விரும்பக் கூடியதில் பல்வேறு வெரைட்டிகள் கிடையாது. குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற ஊட்ட சத்து நிரம்பிய ஒரே வகையிலான இனிப்பும் இல்லை.எனவே இதில் ஸ்டார்ட் அப் உருவாக்கலாம் என்கிற நம்பிக்கை வந்தது.

இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக 6 கோடி முதலீட்டில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டோம். தற்போது மேலும் 20 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளோம். பெங்களூரு, புணே, கோயம்புத்தூர் என மூன்று இடங்களில் தயாரிப்பு ஆலை, அமெரிக்காவில் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தினையும் உருவாக்கியுள்ளோம். தற்போது அமேசான், ஸ்நாப்டீல், பேடிஎம் மால்களில் விற்பனையில் உள்ளது. விரைவில் நாடு முழுவதும் 2 ஆயிரம் சில்லரை வர்த்தக மையங்களுக்கு கொண்டு செல்ல இலக்கு வைத்துள்ளோம். அடுத்த ஆண்டில் இதற்கான தானியங்கி இயந்திரங்களை முக்கிய இடங்களில் நிறுவ உள்ளோம் என்றார்.

எந்த நாட்டில் இருந்தாலும் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் அனுப்பும் வசதியும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon