Primary Menu

Top Menu

September 24, 18

உலக தூக்க தினம் : குறைவாக தூங்கினால் உயிரிழக்கும் அபாயம்

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. சிலருக்கு அதிகம் தூக்கம் வரும். சிலருக்கு தூக்கமே வராது. இது இரண்டுமே நல்லதல்ல. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்.மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் மனிதர்களின் உறக்கம் பற்றிய ஆய்வு ஒன்றினை அறிந்து கொள்வோம்.

புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

4 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகள் தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

1 வயதில் இருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் .

3 வயதில் இருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

6 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை உறங்கலாம்.

Comments

அதிசய இரட்டைதலை பாம்பு உயிருடன் பிடிபட்டது

விர்ஜினியா நாட்டில் செம்பு நிறத்தில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon